பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாள் விழா நேற்று(15) மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காமராஜரின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாள் விழா இன்று மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடினார்கள். மாணவ- மாணவிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஜிம்கானா கிளப் மற்றும் தி.நகரில் அவரது இல்லத்தில் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, கு.செல்வபெருந்தகை, டி.யசோதா, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் 50 மாணவ- மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் கல்வி உதவி தொகை, 200 ஏழைகளுக்கு இலவச வேட்டி- சேலைகள் வழங்கினார்.
கட்சி நிர்வாகிகள் ரஞ்சன், ஏழுமலை, கடல் தமிழ்வாணன், சேகர், சரவணன், ராகுல்காந்தி, ராஜேந்திரன், தனலெட்சுமி, துரை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.நகர் பகுதி காங்கிரஸ் தலைவர் நாச்சிகுளம் சரவணன் தலைமையில் மேற்கு மாம்பலத்தில் மாணவ- மாணவிகளுக்கு மாம்பலம் ராஜேந்திரன் நோட்டு புத்தகம் வழங்கினார். டி.வி.பாண்டியராஜ், தி.நகர் ஜெ.ஜெயராஜ், கோடம்பாக்கம் ராஜசேகர், அசோக் நகர் கணபதி பங்கேற்றனர்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கடற்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் கட்சி தலைமை அலுவலகத்திலும், தொண்டர்களுடன் கொண்டாடினார்.
இதில் துணைத் தலைவர் கோவை தங்கம், பொதுச்செயலாளர் ஞானசேகரன், விடியல் சேகர், ஆர்.எஸ்.முத்து, முனைவர் பாஷா, சக்திவடிவேல், ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லவபுரம் பெருநகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் குரோம்பேட்டையில் காமராஜர் சிலைக்கு நகர தலைவர் முருகேசன் தலைமையில் மாவட்ட தலைவர் மணி மாலை அணிவித்தார். தலைமை நிலைய செயலாளர் டி.என். அசோகன், என்.ராதா கிருஷ்ணன், ரோஸ்மல்லிகா, ராமச்சந்திரன், சர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கடற்கரை காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், எம்.என்.ராஜா, கரு.நாகராஜன், வக்கீல் பிரிவு மாநில செயலாளர் தங்கமணி, மாவட்ட தலைவர் தனஞ்செயன், காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத் குமார், நிர்வாகிகள் சுந்தரேசன், சேவியர், விவேகானந்தன், மகாலிங்கம், ஆதித்தன், தீபா பேரவை தொண்டன் சுப்பிரமணி, புரட்சிபாரதம் பூவை ஜெகன் மூர்த்தி, புதிய நீதிக்கட்சி செயலாளர் ஏ.ரவிக்குமார், சேதுராமன், பசும்பொன் மக்கள் கழக தலைவர் இசக்கி முத்து, நிலத்தரகர் சங்க தலைவர் வி.என்.கண்ணன்,
திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க தலைவர் வி.பி.மணி, ஆலந்தூர் கணேசன் நாடார், அம்பத்தூர் செ.ஆஸ்டின், சத்திரிய நாடார் சங்கம் சந்திரன் ஜெயபால், மாரித்தங்கம் மற்றும் பத்மநாபன் உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.
தியாகராய நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, மாம்பலம் வி.வினோத் நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் காமராஜர் இல்லத்தில் 115 கிலோ எடையுள்ள ராட்சத லட்டு கொண்டு வந்து இருந்தார். அதனை காமராஜரின் பேரன் குமரவேல் மாணவ -மாணவிகள் பொது மக்களுக்கு வழங்கினார். இதில் தென் இந்திய நாடார் சங்க பொது செயலாளர் கார்த்திகேயன், சுபாஷ், மார்ககெட் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை, சென்னை புறநகர் நாடார் சங்க தலைவர் கொளத்தூர் த.ரவி, நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், அயப்பாக்கம் வட்டார நாடார் சங்க தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் 1000 பேருக்கு இனிப்புடன் கூடிய அன்னதானம் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், வழங்கப்பட்டது.
10-வது மற்றும் 2-வது வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.
சங்க தலைவர் ராஜகோபால் நாடார், செயலாளர் திருப்புகழ் நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.