
இந்த உதவிகளுக்காக உலகத் தமிழர் பேரவைக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களான இலங்கை வம்சாவளி மருத்துவர்கள் 17 பேர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நோர்வே, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி முதலான நாடுகளைச் சேர்ந்த உலகத் தமிழர் பேரவையின் மருத்துவ குழுவினரே இந்த சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.
கடந்த 2 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதிவரை களுத்துறையிலும், 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை மாத்தறையிலும் மருத்துவ முகாம்கள் நடப்பட்டுள்ளன.
இவற்றின் ஊடாக 780 நோயாளிகளுக்கு கண், பல் உள்ளிட்ட ஏனைய சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.