அரசியலில் பெண்களின் பங்களிப்பு பட்டியலில் இலங்கை 179 ஆவது இடத்தில்

272 0
பெண்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் ஸ்தாபனத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வரையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.
190 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், இலங்கை 179 ஆவது இடத்தில் உள்ளது.
இலங்கையில் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 13 பெண் உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளனர்.
இது மொத்த சதவீதத்தில் 5.8 வீதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை,அமைச்சர்களாக பதவி வகிக்கும் பெண்கள் தொடர்பான பட்டியலில், இலங்கை 164 ஆவது இடத்தில் உள்ளது.
47 அமைச்சர்களைக் கொண்ட இலங்கையில், 2 பெண் அமைச்சர்கள் மட்டுமே உள்ளதாகவும், இது மொத்த சதவீதத்தில் 4.3 வீதம் என்றும் ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் அரசியலில் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதிததுவத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகின்றது.
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பட்டியலில், ருவண்டா முதலாம் இடத்தில் உள்ளது.
அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள 80 பிரதிநிதிகளுள் 49 பிரதிநிதிகள் பெண்களாவர். மொத்த சதவீதத்தில் 61.3 என்ற வீதத்தை இது பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment