களுத்துறை விகாரைக்கு அருகில் யுவதியொருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று மாலை மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் முன் பாய்ந்தே அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் தெற்கு களுத்துறையை சேர்ந்த 18 வயதான யுவதியொருவர் என தெரியவந்துள்ளது.
சடலம் தற்போது நாகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
களுத்துறை தெற்கு காவற்துறையால் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.