காணி பயன்பாட்டின் போது ஆக்கபூர்வ நெருக்கடிகளை தவிர்க்க நடவடிக்கை

285 0

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள காணிகளை பயன்படுத்தும் போது பொதுமக்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் ஆக்கபூர்வமான பிரச்சினைகளை குறைப்பதற்கு சட்டங்களை வகுக்கவுள்ளதாக காணி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த அமைச்சின் செயலாளர் ஐ.எச்.கே.மஹாநாம இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் குறிப்பிடடார்.

அதன்படி எதிர்வரும் ஒரு வாரத்தில் காணி அபிவிருத்தி சட்டமூலத்தில் உள்ள பிரச்சினைகளை திருத்தியமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐ.எச்.கே.மஹாநாம தெரிவித்தார்.

Leave a comment