அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் நாள் வரை பொறுமை காக்குமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் தமது பதவிகளை விட்டு விலகி தனியான அணியாகச் செயற்படுவது அல்லது எதிரணியுடன் இணைந்து கொள்வதென முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பங்களாதேசுக்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, அவர்களைச் சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இதன்போதே, அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முடிவை வரும் டிசெம்பர் 31ஆம் நாள் வரை நிறுத்தி வைக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.