அமெரிக்காவினால் முஸ்லிம் நாடுகள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை சட்டம் சற்று தளர்த்தப்பட்டுள்ளது

363 0

அமெரிக்காவினால் முஸ்லிம் நாடுகள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த குடிவரவு தடை சட்டம் சற்று தளர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னர் லிபியா, ஈரான் உள்ளிட்ட ஆறு நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவில் உள்நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவுக்கமைய, அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் நெருங்கிய சொந்தம் அல்லது அமெரிக்காவில் வியாபாரத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்களை தவிர்ந்த ஏனையவர்களின் விஸா அனுமதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த தடையுத்தரவு குறித்து அமெரிக்க நீதிமன்றம் ஒன்று வழங்கிய உத்தரவொன்றுக்கு அமைய அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் பாட்டி மற்றும் பாட்டன் ஆகியோருக்கு அமெரிக்கா செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment