கிழக்கின் சுற்றுலாத்துறையை செயற்திறன் மிக்கதாய் மாற்றியுள்ளோம்-கிழக்கு முதலமைச்சர் தெரிவிப்பு

3835 0

தாம் முதலமைச்சராக பதவி வகிக்க முன்னர் தாம் சுற்றுலா  அமைச்சராக இருந்த காலப்பகுதியில் குறித்த அமைச்சுக்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அதிகார இழுபறி இருந்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

முன்னர் இருந்த ஆளுனர் மொஹான் சமரநாயக்க மற்றும் மத்திய அரசின் அமைச்சுக்களில் இருந்த சில அதிகாரிகளும் சுற்றுலா அமைச்சுக்கான அதிகாரங்களை வழங்குவதில் அக்கறை செலுத்தவில்லை எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைமைக் காரியாலயத்தை மட்டக்களப்பில் திறந்து வைத்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறினார்,

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக நாம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம்,

தற்போது ஜனாதிபதியின் செயலாளராக உள்ள ஒஸ்ரி்ன் பெர்ணாண்டா அவர்கள் ஆளுநராக பதவியேற்றதன் பின்னர் தான் அவருடன் இணைந்து கிழக்கு மாகாண சுற்றுலாப்  பணியகமொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்,

அதனடிப்படையில் நகர்வுகளை முன்னெடுத்து 2016 ஆம் ஆண்டு சட்டமூலமொன்றை சமர்ப்பித்து அதனை நிறைவேற்றி இன்று சுற்றுலாப் பணியகத்தின் தலைமைக்காரியலாயத்தை ஸ்தாபித்துள்ளோம்.

இதன் மூலம் சர்வதேச ரீதியில் உள்ள சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்திலான திட்டங்களை முன்னெடுத்து கிழக்கு மாகாணத்தை சுற்றுலா அபிவிருத்தி மிக்க மாகாணமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

எனவே மாகாணத்துக்கான தேவைகளை பெற்றுக் கொள்வதற்கு நாம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகி்ன்றோம் ,

இன்று ஜனாதிபதியும் பிரதமரும் எமது பல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை முன்னெடுக்க ஆதரவு வழங்குவது குறித்து நாம் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்,

கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டு மென்மேலும் கிழக்கிற்கான நிதிகளை வழங்கி எம்மக்களின் வாழ்வியலைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தொடர்ந்தும் எமக்கு உதவிகளை வழங்க வேண்டும் எனக் கேட்டு கொள்வதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்

Leave a comment