கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் தவறான கொள்கைகளை கடைபிடித்ததன் காரணமாக முழு விவசாய ஏற்றுமதி வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் யதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியாத நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.