இலங்கை ஜனாதிபதிக்கும் பங்களாதேஷ் பிரதமருக்கும் இடையே சந்திப்பு

1926 0

பங்களாஷே_க்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார மற்றும் வர்த்தகம் மற்றும் வலய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை மற்றும் பங்களாதேஷூக்கு இடையில் பல்வேறு உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடவும் விசேட பொருளாதார வலயத்தை உருவாக்குவது தொடர்பிலும் அரச தலைவர்கள் இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

விவசாயம்,கடற்தொழில், தகவல் தொழிநுட்பம் மற்றும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தல் முதலான விடயங்களில் இணைந்து பணியாற்றுவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் பங்களாதேஷ் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்யவிருக்கும் சந்தர்ப்பம் குறித்து ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த அழைப்பை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment