இந்திய விண்ணாய்வு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கலக்சி எனப்படும் நட்சத்திரமண்டலத்துக்கு, சரஸ்வதி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நட்சத்திர மண்டலம், எமது சூரிய மண்டலத்தில் இருந்து சுமார் 5 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது.
இதன் மொத்த பருமன் எமது சூரியனைக் காட்டிலும் 20மில்லியன் பில்லியன் மடங்குகள் அதிகமாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நட்சத்திர மண்டத்தில் 10 ஆயிரம் நட்டத்திரங்கள் 42 குழுமங்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது 10 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாகி இருக்கலாம் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பூனேவைத் தளமாகக் கொண்டு செயற்படும் விஞ்ஞானிகள் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சரஸ்வதி என்ற நட்சத்திர மண்டலேமே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நட்சத்திர மண்டலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அண்டவெளியில் சுமார் 10 மில்லியன் நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
எமது பால்வீதியில் மாத்திரம் 54 நட்சத்திர குழுமங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.