இந்திய கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லையைத் கடந்து இலங்கை கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமை தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸின் கடிதம் ஒன்றுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கைக் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்படுகின்ற தமிழக கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழக கடற்றொழிலாளர்கள் எல்லைக் கடந்து இலங்கை கடற்பரப்பிற்குள் செல்வதாலேயே கைது செய்யப்படுகின்றனர்
இவ்வாறு தொடர்ந்து கடற்றொழிலாளர்கள் எல்லைத்தாண்டிச் செல்வது அதிகரிக்கும் பட்சத்தில், ராஜதந்திர ரீதியாக கடற்றொழிலாளர்களை விடுவித்துக் கொள்வதிலும் சிரமம் ஏற்படும் என்று சுஸ்மா சுவராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.