யாழ்ப்பாணத்தில் அமரர் அமிர்தலிங்கத்தின் 28 ஆவது நினைவு தினம்(காணொளி)

9344 43

தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவர் அமரர் அமிர்தலிங்கத்தின் 28 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில்

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த நினைவு தினத்தில், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கமும் இடம்பெற்றது.

அமரர் அமிர்தலிங்கம் நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment