நாட்டில் உள்ள அனைத்து வயோதிப அரசியல் வாதிகளும் விலகி இளைஞர் யுவதிகள் அரசியலுக்குள் நுழைவதற்கு இடம் கொடுக்க வேண்டும்.இளைஞர்கள், யுவதிகள் என்றால் பயங்கரவாதிகள், யுவதிகள் என்றால் பயங்கரவாதிகள்,வயோதிபர்கள் என்றார் அரசியல் வாதிகள் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். இதுவே நல்லிணக்கத்திற்கான அடித்தளமாக இருக்கும்.இவ்வாறு நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் செயலணியின் கலந்து கொண்டவர்களினால் கருத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அங்கு மேலும் கருத்துக்கள் வெளியிடுகையில்:- நாட்டில் பெண்களுக்கான சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற கோசம் பேச்சளவில் மட்டுமே உள்ளது. அது நடமுறையில் இல்லை.குறிப்பாக இலங்கை பாராளுமன்றத்தினை எடுத்துப் பார்த்தால் 200 ஆண்களும், 3 இளைஞர்களும், 5 பெண்களுமே உள்ளார்கள். பெண்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பாக பேசுவதற்கு பலமானவர்கள் அங்கு இல்லை.
இதுதவிர பெண்கள் பாராளுமன்ற சென்றால் அவர்களுக்கு சிறுவர், மகளீர் விவகார அமைச்சு பதவிகள் மட்டுமே வழங்கப்படுகின்றது. வேறு அமைச்சுக்கள் பெண்களை நம்பி வழங்கப்படுவது இல்லை. பெண்கள் பாராளுமன்றத்தில் அதிகளவில் இல்லாத காரணத்தினாலேயே இந்நத நிலை ஏற்படுகின்றது. அரசியலில் பெண்களுக்க 50 சதவீத பங்கு வழங்கப்பட வேண்டும்.
இங்குள்ள அரசியல் வாதிகள் அனைவரும் வயோதிபர்களாகவே உள்ளார்கள். இளைஞர் யுவதிகளுக்க அரசிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை பெரும் கட்சிகள் வழங்குவதில்லை. வாக்கு சேகரிப்பதற்கான பிரச்சார நடவடிக்கைகளுக்க மட்டும் பெண்களை பயன்படுத்துவார்கள்.குறிப்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆசனங்கள் கேட்டு கட்சிகளிடம் சென்றால் 50 இலட்சம் முதல் ஒரு கோடிரூபா பணம் வைத்துள்ளீர்களா என்று எங்களை கேட்கின்றார்கள். பணபலத்தாலும் பெண்களை அடக்குகின்றார்கள்.
உலகத்தில் தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் எங்கள் தமிழ் பெண்கள். அவர்களுக்கு ஏன் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை. பொதுவாகவே இந்த வயோதிப அரசியல் வாதிகள் தங்களுடைய சந்ததியினருக்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள்.பொதுவாக வயோதிபர்கள் யார் என்றார் அவர்கள் அரசியல் வாதிகள் என்பார்கள். அதே போன்று இளைஞர்கள் யார் என்றால் அவர்கள் பயங்கரவாதிகள் என்பார்கள்.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும். வயோதிப அரசியல் வாதிகள் ஒதுங்கிக் கொண்டு இளைஞர்கள் அரசியலில் வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இது நடைபெறாவிட்டால் இளைஞர்கள் எழுச்சி ஏற்படுவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்றனர்.