இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினைச் சேர்ந்த 100 பேர் தமது பிள்ளைகளுடன் குடும்பமாக இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கூட இன்னும் வீடு திரும்பவில்லை.நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்களிடம் இவர்கள் தொடர்பான சரணடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் கேழுங்கள்.
இவ்வாறு நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் செயலணியிடம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்னர்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- இறுதி யுத்தம் முடிவடைந்ததாக பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற எமது மத்தியில் இரவு பகலாக இராணுவத்தினர் அறிவிப்புக்களை விடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு நாள் இருந்தால் ஏனும் தங்களிடம் வந்து சரணடைந்துயுமாறும், தாங்களாக விசாரணை செய்து பிடித்தால் காலவரையறையற்ற மறியலில் வைக்கப்படுவீர்கள் என்றும், தாமாக முன்வந்து சரணடைபவர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தல் தொடர்ச்சியாக வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி யுத்தம் முடிந்தாக அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி காலை 8.30 மணிக்கும் 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையில் இருந்தவர்கள் மற்றும் ஏனைய துறைகளில் இருந்தவர்கள் உட்பட 100 மேற்பட்ட விடுதலைப் புலிகள் தமது பிள்ளைகள், மனைவிகளுடன் இராணுவத்தினரிடம் சென்று சரணடைந்தார்கள்.
இவ்வாறு சரணடைந்தவர்களுக்கான பொறுப்பினை ஜோசப் பாதர் ஏற்றுக் கொண்டிருந்தார். இவர் முன்னிலையிலேயே இவர்கள் சரணடைந்தார்கள். இவர்களின் ஒருவராகவே வலது கை இல்லாத எனது மகன் ஒருவரும் சரணடைந்திருந்தார்.இவ்வாறு சரணடைந்தவர்கள் தொடர்பான இதுவரை எந்த தகவலும் இல்லை. சகல சிறைகளிலும் தேடிவிட்டோம். பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அவர்களை அழைத்துச் சென்றிருந்தார். அவர்களின் சீருடையில் உள்ள இலக்கத்தினை வைத்து அவர்களை அடையாளம் காட்டலாம். ஆனால் இராணுவத்தினருடைய சீருடையில் அவ்வாறான இலக்கம் இலலை. நாங்கள் எதனைத வைத்து இராணுவத்தினரை அடையாளம் காட்டுவது.
ஏப்படியாவது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எனது பிள்ளை தொடர்பாக அறிந்து செல்லுங்கள் என்றார்.