ஒன்பது மாதங்களாக வெளியில் தலைகாட்டாமல் இருந்த வடகொரிய அதிபை கிம் ஜாங்-ன் மனைவி ரி சோல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வடகொரிய அதிபராக உள்ள கிம் ஜாங் உன்னின் மனைவியாக இருக்கும் ரி சோல் ஜு கடந்த ஒன்பது மாதங்களாக வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்தார். இதனால், கிம் அவரை ஒதுக்கியிருக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. மேலும், அவரது மனைவியை கிம் கொலை செய்து இருக்கலாம் எனவும் வதந்திகள் கிளம்பின. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி கிம் தமது மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் 9 மாதங்கள் தொடர்ந்து ரி சோலை கண்காணித்து வந்தார்.
இந்தநிலையில், வடகொரியா கடந்த வாரம் சோதனை மேற்கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றி அடைந்ததன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கிம்மின் மனைவி 27 வயதான ரி சோல் ஜூ கலந்து கொண்டுள்ளார். வடகொரியாவின் பெண்கள் இசைக்குழு நடத்திய சிறப்பு இசைக்கச்சேரியின் போது கிம் தமது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார்.
பொதுவாக ரி சோல் ஜூ பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்தே வருவார் என கூறப்படுகிறது. தற்போது 4 மாதங்களுக்கு பின்னர் பொது நிகழ்ச்சி ஒன்றில் ரி சோல் கலந்து கொண்டுள்ளதால் அவர் மீதான யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.