எளிய மக்களின் வாழ்வில் மிகப் பெரிய தாக்குதலை நிகழ்த்த உள்ள, தேசிய இனங்களின் உரிமைகளைப் பறிக்கிற GST வரி விதிப்பு குறித்த விளக்கங்களும், அதனை எதிர்க்க வேண்டியதன் அவசியமும் குறித்த முக்கியமான கருத்தரங்கத்தினை வருகிற ஜூலை 16, 2017 ஞாயிறு மாலை 5 மணியளவில் மேற்கு மாம்பலம், தம்பையா தெரு, ஸ்டேட் பேங்க் அருகில் உள்ள ஆனந்த் சந்திரசேகர் அரங்கில் நடத்துகிறோம். அவசியம் வாருங்கள்.