புதிய அரசியல் சாசனமொன்று உருவாக்கப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சாசனத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதனால் புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்வதில் பயனில்லை என குறிப்பிட்டுள்ள அவர் பாராளுமன்றினதும் மக்களினதும் அனுமதியுடனேயே புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய அரசியல் சாசனத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.