அஞ்சலோ மெத்தீவ் பதவி விலகியதை அடுத்து, இலங்கை கிரிக்கட் அணிக்கு இரண்டு தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி டெஸ்ட் அணிக்கான தலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கிரிக்கட்டின் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இந்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 50 ஓவர்கள் மற்றும் 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட் போட்டிகளுக்கான அணியின் தலைவராக உபுல்தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.