ரஸ்ய சட்டத்தரணியுடனான சந்திப்பு

278 0

தமக்கும் ரஸ்ய சட்டத்தரணிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து தமது தந்தைக்கு எதுவும் தெரியாது என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜுனியர் ரஸ்யாவின் சட்டத்தரணி ஒருவரை சந்தித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கும் ரஸ்யாவின் குறித்த சட்டத்தரணிக்கும் இடையில் பரிமாற்றிக் கொள்ளப்பட்ட மின்னஞ்சல்களை அவரே வெளியிட்டுள்ளார்.

இதன்படி ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலரிகிளின்டனை பாதிக்கக்கூடிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஆனால் இந்த சந்திப்பின் போது முக்கியமான தகவல் எதுவும் பரிமாற்றப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பை தாம் வேறு விதமாக கையாண்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment