வீதி ஒழுங்கு விதிகளை மீறுவது தொடர்பிலான அபராத தொகை அதிகரிக்கப்படும் போது வேக கட்டுப்பாட்டை மீறும் முறையின் அடிப்படையில் அபராத் தொகையை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்;ட குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.
அந்த குழுவினால் தாயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அதில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பொது வானூர்திகள் சேவை அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.
இந்த முறை வரவு செலவு திட்டத்தின் ஊடாக வீதி ஒழுங்குகளுக்காக குறைந்த பட்ச அபராதம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டது.
அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், அது தொடர்பில் ஆராயும் பொருட்டே இந்த குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.