யா/ ஊர்காவற்றுறை சென். மேரிஸ் றோ.க. பெண்கள் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா

315 0
யாழ்/ ஊர்காவற்றுறை சென். மேரிஸ் றோ.க. வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை மண்டபத்தில்  பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி கிறேஸ் மேரி ஸ்ரனிஸ்லாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். விந்தன் கனகரட்ணம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக யாழ்/ ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி இயக்குநர் அருட்பணி  ஜேம்ஸ் சிங்கராயர் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஊர்காவற்றுறை பங்குத்தந்தை அருட்பணி  P.F இராஜசிங்கம், ஊர்காவற்றுறை கோட்டக் கல்வி அதிகாரி திரு. சத்தியசீலன், பழைய மாணவியான திருமதி மனோகரன் மேரி சஜிலா ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் விருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்படுவனையும், பிரதம விருந்தினரான யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். விந்தன் கனகரட்ணம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

Leave a comment