நாட்டில் சகவாழ்வினை ஏற்படுத்த முயற்சி செய்யும் போது ஒரு சில ஊடகங்கள் இனவாத்தினை தூண்டுவதற்கு முயற்சி செய்கின்றன என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் புனித கப்ரியல் பெண்கள் பாடசாலையில் மத்திய மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 180 லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட கட்டட திறப்பு விழா மத்திய மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது
அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய யாப்பு சீர்திருத்தத்தை வைத்துக்கொண்டு பௌத்த மதத்திற்குள்ள இடத்தினை இல்லாதொழிப்பதாகவும் நாட்டை பிரிப்பதாகவும் செய்திகளை பரப்பி இனவாதத்தினை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தெளிவாக தெரிவித்திருக்கிறார் பௌத்த மதத்திற்குள்ள இடம் இல்லாமலாக்கப்பட மாட்டாது என்று.
இந்த நாட்டில் இரண்டு சீர் திருத்தங்கள் நடைபெற்றன. ஒன்று 1972, 1978 ஆகிய சீர்திருத்தங்களின் போதும் பௌத்த மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இன்று நடைபெறும் சீர் திருத்தத்திலும் பௌத்த மதத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. ஜனாதிபதியின் ஒரே நோக்கம் ஒன்றுபட்ட நாட்டிக்குள் இருந்து கொண்டு சகவாழ்வினை முன்னெடுப்பதாகும் என்றார்.