பருத்தித்துறை தும்பளை பகுதியில் கர்ப்பிணிப்பெண் மரணம்!

298 0

 வடமராட்சி லட்சுமணன் தோட்டம் தும்பளைப் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 8 மாத கர்ப்பிணியான றோகினிதேவி யேந்தராசா (40 வயது) என்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை ஒரு மணியளவில் குறித்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது;

குறித்த கர்ப்பிணி பெண் கடந்த இரவு பழங்கள் உட்கொண்ட பின்னர் சோடா அருந்தியதாகவும் பின்னர் அதிகாலைவேளையில் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிரேத பரிசோதனையில் இதயத்தில் பலவீனம் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் உடல் பாகங்கள் சில பரிசோதனைக்கும் அனுப்பட்டுள்ள நிலையில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

Leave a comment