சுன்னாகம் பகுதியில் இன்று மாலை கொழும்பு செல்லும் சொகுசு பஸ் ஒன்று மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இருப்பினும் குறித்த பஸ்சை அப்பகுதியில் உள்ள பொலிசார் விசாரணைகள் ஏதும் இன்றி தொடர்ந்து பயணம் மேற்கொள்ள விட்டுள்ளதாக சுன்னாகம் பகுதியில் இன்று மாலை கொழும்பு செல்லும் சொகுசு பஸ் ஒன்று மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இருப்பினும் குறித்த பஸ்சை அப்பகுதியில் உள்ள பொலிசார் விசாரணைகள் ஏதும் இன்றி தொடர்ந்து பயணம் மேற்கொள்ள விட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பஸ் சிங்கள அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது எனவும் அதனாலேயே அந்த பஸ்சை பொலிசார் விடுவித்துவிட்டதாகவும் கொழும்பு – யாழ் பஸ் சேவையில் ஈடுபடுபவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் நேற்று யாழ் கொடிகாமம் பகுதியில் கஞ்சா கடத்திச் சென்று கொண்டிருந்த பஸ்சும் சிங்களவருக்கு சொந்தமானது என்றவுடன் பொலிசார் பஸ்சை தடுத்து வைக்காது செல்ல அனுமதித்ததாகவும் ஆனால் இதே போன்ற நிலை தமிழ் பஸ் உரிமையாளர்களுக்கு வந்தால் குறித்த பஸ் உரிமையாளர்கள் மற்றும் பஸ் சாரதிகளையும் பஸ்சையும் பொலிசார் படாதபாடுபடுத்தியிருப்பார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.