இலங்கையில் வெற்றிகரமாக முடிந்த இருதய மாற்று அறுவைச் சிகிச்சை: சுகாதார அமைச்சர் பாராட்டு

268 0
இலங்கையின் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக கண்டி வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்னாயக்கா தெரிவித்தார்.
 இது குறித்து வைத்தியர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த இருதய மாற்று அறுவைச் சிகிச்சையானது
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான பெண் ஒருவருக்கே இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 8 மணித்தியாலங்கள் இச் சிகிச்சை இடம்பெற்றதாக தெரிவித்தார்.
இவரது இருதயம் சுமார் 12 வீதம் செயலிழந்து காணப்பட்டது. இந்நிலையில்  மூளைச்சாவு அடைந்திருந்த 24 வயதான இளைஞன் ஒருவருடைய இருதயம் குறித்த பெண்ணிற்கு பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களும் வேறு இரண்டு நோயாளர்களுக்கு மாற்றறுவை சிகிச்சைமூலம் பொருத்தப்பட்டுள்ளன.
இருதய மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணும், சிறுநீரகம் பொருத்தப்பட்ட மற்றைய இரண்டு நோயாளர்களும் நலமுடன் உள்ளதுடன்   அவரச சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும்  வைத்தியர் சமன் ரத்னாயக்கா தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் தகவலின்படி இச் சிகிச்கையை மேற்கொள்வதற்காக கண்டி பேராதெனிய  வைத்தியசாலை, அநுராதபுரம் பொதுவைத்தியசலை, வெலிசறை வைத்தியசாலை பொறளை சிறுவர் வைத்தியசலை ஆகியவற்றின் வைத்திய நிபுணர்கள் அழைக்கப்பட்டு இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்களை தொடர்புகொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.

Leave a comment