முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
27 மில்லியன் ரூபாய் செலவில் பொரளை, கிங்ஸிலி வீதியில் வீடொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கை, நீதிபதி கிஹான் குலதுங்க விசாரணை செய்தார்.
அதன்போது, இந்த வழக்கை நவம்பர் மாதம் 20 மற்றும் 21 திகதிகளில் விசாரணை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன், குறித்த வழக்கினை ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாகவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பம்பலபிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹட் ஷியாம் கொலை தொடர்பில் கைதுசெய்ப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கை ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் தினந்தோறும் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.