இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டால் நாடுதழுவிய வேளை நிறுத்தம் ஒன்றை முன்னெடுப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேராசிரியர் காலோ பொன்சேகாவை அந்த பதவியில் இருந்து வெளியேற்றிவிட்டு, அவருக்கு பதிலாக சைட்டம் நிறுவனத்துக்கு ஆதரவான ஒருவரை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக மருத்து அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், மருத்துவ சபையின் புதிய தலைவராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளவர் பன்னாட்டு ஆயுர்வேத உற்பத்தி நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.