ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஆஜராகியுள்ளார்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு துண்டுகளை வெட்டி அகற்ற பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவும் ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஆஜராகியுள்ளார்.
2014ம் ஆண்டு அம்பாறை பகுதியில் நீர் வழங்கல் வேலைத் திட்டமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே அவர் அங்கு சென்றுள்ளார்.