வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் கட்டார் பிரதமர் ஷெய்க் அப்துல்லா பின் நாசார் பின் கலிபா அல்தானி (Sheikh Abdullah bin Nasser bin Khalifa al-Thani) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கட்டாரில் வைத்து இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து விஷேடமாக அவதானம் செலுத்தியுள்ளதோடு, பொதுப் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.
இதேவேளை, கட்டார் வெளிவிவகார அமைச்சர் ஷெயிக் மொஹமட் பின்அப்துல் ரகுமான் அல்தாய்யும் (Sheikh Mohamed bin Abdulrahman al-Thani) ரவி கருணாநாயக்கவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.