நவாலி படுகொலையின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

317 0

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலையின் 22ஆம் ஆண்டு நினைவுநாள்நேற்று (9) மாலை சென்பீற்றர்ஸ் தேவாலயத்தின் பங்குத்தந்தை றோய் பேடிணன் தலைமையில் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத்தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

1995ஆம் ஆண்டு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சியில், சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையின்போது பெருந்தொகையான மக்கள் இடம்பெய்ந்து நவால சென்பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இம்மக்கள் மீது ஜூலை 9ஆம் நாள் காலை மூன்று விமானங்கள் 13 குண்டுகளைத் தொடர்ச்சியாக வீசின. இச்சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 147 மக்கள் உடல் சிதறிப் பலியாகினர். 350 பேருக்குமேல் படுகாயமடைந்தனர்.

Leave a comment