பத்மவிபூஷன் விருது பெற்ற அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதர் நரேஷ் சந்திரா (82) நேற்றிரவு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் கல்லூரிப்படிப்பை முடித்த நரேஷ் சந்திரா, இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக தேர்வாகி மத்திய அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். 1990-ம் ஆண்டில் கேபினட் செயலாளராக பதவி உயர்வு பெற்ற நரேஷ், 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.
பணி ஓய்வு பெற்ற அவர் கடந்த வாரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க ஆரம்பித்ததால் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி நரேஷ் சந்திரா காலமானார்.
தனது பதவிக்காலத்தில் இந்தியா – அமெரிக்கா இடையே உள்ள உறவை வலுவாக்கியதால் 2007-ம் ஆண்டில் பத்ம பூஷன் நரேஷ் சந்திராவுக்கு மத்திய அரசு வழங்கியது.