அரசுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய 18 கிளர்ச்சியாளர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக சோமாலியா ராணுவம் அறிவித்துள்ளது.
அரசுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய 18 கிளர்ச்சியாளர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக சோமாலியா ராணுவம் அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்கா நாடான சோமாலியா வறுமை மிகுந்த நாடுகளில் ஒன்றாகும், இந்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அல் கொய்தா, அல் ஷபாப் ஆகிய தீவிரவாத இயக்கங்களின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் குழு செயல்பட்டு வருகின்றது. அரசுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத தாக்குதல்களையும் இந்த இயக்கம் நடத்தியுள்ளது.
குறிப்பாக வடக்கு பிராந்தியமான பண்ட்லாட் பகுதியில் செயல்படும் இவர்களை வேட்டையாடும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக நடத்திய சிறப்பு ஆபரேசனில் 18 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், கல்கலா மலைப்பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் சோமாலியா ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், கிளர்ச்சியாளர்களின் முகாம்களில் இருந்த ஆயுதங்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோமாலியா ராணுவத்திற்கு அமெரிக்கா இதற்கென சிறப்புப்பயிற்சிகள் அளித்தது குறிப்பிடத்தக்கது.