மீன்பிடி சட்ட அமுலாக்கத்தின் பின் 3 இந்திய மீனவர்கள் கைது(காணொளி)

488 0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 3 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் 3 பேர் நேற்றிரவு யாழ் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுப்பட்டுக் கொண்டு இருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த 3 பேரையும் இன்று யாழ் மாவட்ட நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

ஐகாதாப்பட்டிணத்தினை சேர்ந்த குறித்த மீனவர்கள் மூவரும், இன்றைய தினம் யாழ் ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிபதியின் வாஸத்தலத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதன்போதே அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a comment