32 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் கோரிக்கை

319 0

gk-vasan-720x480ஆந்திராவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 32 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கூலிவேலைக்காக பலர் செல்கின்றனர்.
அவ்வாறு ஆந்திராவிற்கு செல்கின்ற தமிழக கூலித் தொழிலாளர்களை அந்த மாநில அரசாங்கம் சந்தேகத்தின் பேரிலும், செம்மரம் கடத்துவதாகவும் கூறி கைதுசெய்து வருகிறது.
அண்மையில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து 29 பேர், வேலூர் மாவட்டத்திலிருந்து 2 பேர், சென்னையிலிருந்து ஒருவர் என்று மொத்தம் 32 பேர் திருப்பதிக்கு சென்ற போது ஆந்திர காவல்துறையினர் அவர்களை கைதுசெய்துள்ளனர் என்று ஜி.கே.வாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.