ஆட்கள் அற்ற வீடுகளால் ஆபத்து -அதிகாரிகள் கண்டுகொள்ளமை -கல்லாறு மக்களின் ஆதாங்கம்

464 0
கிளிநொச்சி கல்லாறு  குடியேற்ற கிராமத்தித்தில் நூறுக்கும் மேற்பட்ட வீடுகளில்  ஆட்கள் இல்லாமையால் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக கல்லாறு கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுணாமியின் பின்  கல்லாறு பகுதியில் 140 குடும்பங்கள் மீளகுடியேற்றப்பட்டனர் பின்னர் யுத்தம் முடிவடைந்த  மீண்டும் மக்கள் மீளக்குடியேறியமக்களுக்கு மேலும்   100 குடும்பங்களுடன் மீளக்குடியேறினர்.
இன்று இப்பகுதியில் குடிநீர் இன்மை போக்குவரத்து பிரச்சனைகளை தொழில் இன்மைகளை காரணம் காட்டி 100 மேற்ப்பட்ட மக்கள் கல்லாறு பகுதியில் இருந்து வெளியேறி உள்ளனர்.
இவ்வாறு வீடுகளில் மக்கள் வெளியேறியமையினால்  அந்த வீடுகளால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 குறிப்பாக மர்மநபர்களின் நடமாட்டம்  போதைப்பொருள் பாவனை  போன்’ற பல பிரச்சனைகள் இடம்பெறுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
இதே வேளை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 936 குடும்பங்கள் காணிகள் அற்றவர்களா உள்ளர்கள்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment