ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக செயற்பட்டதாக கூறி, 46 கட்சி அமைப்பாளர்கள் அவர்களின் நிலையில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதில், பெரும்பாலானோர் அண்மையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் பேரணியில் பங்கேற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வியாழக்கிழமையன்று கொழும்பில் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு, கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பது என்று தீர்மானித்தது.
இதன் அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் கட்சி உறுப்புரிமையும் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த ரணதுங்கவுக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.