கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 131 ஆவது நாளை எட்டியுள்ளது.
138 குடும்பங்களுக்குசொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமது சொந்த நிலத்தில் கால் பதிக்கும் எண்ணத்தோடு மார்ச் மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த எமது தொடர் போராட்டத்தை தீர்வு கிடைக்கும் வரை தாம் முன்னெடுக்கப்போவதாக மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாக போராடிவரும் தமக்கு எந்த தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு மக்கள் முயற்ச்சியை மேற்கொண்டுள்ளனர்
இந்நிலையில் இன்றைய தினம் இவர்களின் போராட்டத்துக்கு வருகைதந்த வடமாகாணசபை உறுப்பினர் ஆ புவனேஸ்வரன் அவர்களிடம் ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஏற்ப்பாடு செய்துதருமாறு கோரியதற்கமைவாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக குறித்த சந்திப்புக்கு ஏற்ப்பாடு செய்துதருவதாக உறுதியளித்ததோடு மக்களுடைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.