ஜப்பானில் ஏற்பட்ட கடும் மழையுடனான வெள்ளப்பெருக்கு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் காலநிலை சீர்கேடு தன்மை தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தை அடுத்து ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பல வீடுகள் புதையுண்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளுக்காக 7 ஆயிரத்து 800க்கும் அதிகமான காவல்துறையினரும் பாதுகாப்பு படைத்தரப்பினரும் ஈடுபடடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.