ஜி20 உச்சி மாநாட்டில் பங்கு கொண்ட தலைவர்களில் 19 பேர், பாரீசில் மேற்கொள்ளப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் அமுல் படுத்துவதற்கு உறுதி அளித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்த விடயம் குறித்து பல்வேறு வாதபிரதிவாதங்கள் இடம்பெற்ற போதிலும், உச்சி மாநாட்டின் இறுதி நாளான நேற்று இணக்கபாடு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து முக்கிய உரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை, உச்சிமாநாட்டை நடத்தும் ஜேமனியின் பல நகரங்களில் வன்செயலுடனான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த உச்சி மாநாடு தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க வெளியேறியமைக்கு ஜீ20 தலைவர்கள் தமது கவலையினை வெளியிட்டுள்ளனர்.
இறுதி உரையினை ஆற்றிய ஜேமன் சான்சலர் அன்ஜெலா மேர்க்கல், அமெரிக்க தலைவர் டொனால் ட்ரம்பினால் மேற்கொள்ளப்பட்ட எதிர்நடவடிக்கையினை மாற்றுவார் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, காலநிலை மாற்றம் குறித்து ஏனைய 19 நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைளை அவர் பாராட்டியுள்ளார்.
இதேவேளை. நேற்றயை இறுதி நாள் உச்சிமாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதியின் இருக்கையில் அவர் புதல்வி இவன்கா ட்ரம்ப் சிறிது நேரம் அமர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் இடைநடுவே இந்தோனேஸிய தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த டொனால்ட் ட்ரம்ப் பிறிதொரு இடத்திற்கு சென்ற வேளை அவரது புதல்வி அமர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜதந்திர முறையில் இதுவொரு அசாதாரண நிகழ்வென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.