இலங்கையில் முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சை நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருதய மற்றும் நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை திட்டத்தின் கீழ், கண்டி போதனா மருத்துவமனையில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய மார்படைப்பினை எதிர்கொள்ளும் நிலையில் இருந்த 40 வயதான பெண் ஒருவருக்கு, விபத்தொன்றில் மூளை செயலிழந்த 29 வயதான ஆண் ஒருவரின் இருதயமே பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எட்டு மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் அதிதீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆறு மருத்துவமனைகளைச் சேர்ந்த 20 இற்கும் மேற்பட்ட பல்துறை மருத்துவ நிபுணர்களுடன் 20 மருத்துவர்களும் சமூகமளித்திருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.