கொழும்பு நகரில் கழிவு மற்றும் குப்பைகளை அகற்றும் பிரச்சினைக்கு புதிய முறையின் கீழ் தீர்வு கிட்டியுள்ளதாக உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
இதேவேளை, குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய கருத்து தெரிவிக்கையில், எந்தவொரு காரணத்திற்காகவும் மத்திய கொழும்பு பகுதியில் சேர்க்கப்படும் குப்பைகளை கரதியான கழிவகற்றல் பகுதிக்கு கொண்டு செல்வதில்லை என தெரிவித்தார்.
அதேபோன்று கொழும் மாநகர சபை இலங்கையின் ஊழல் நிறைந்த நிறுவனங்களில் ஒன்று என மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இந்தநிலையில், மேல் மாகாணத்தில் கழிவு முகாமைத்துவ அதிகார சபையினால் கரதியான பிரதேசத்தில் மேற்கொண்டு வரும் பாரிய செயற்றிட்டத்தின் பணிகள் மிக துரிதமாக ஆரம்பிக்கப்படும் என அதிகார சபையின் பணிப்பாளர் நலின் மான்னப் பெரும தெரிவித்தார்.