ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த மொசூல் நகரை ஈராக் ராணுவம் நேற்று முற்றிலுமாக மீட்டுள்ளதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்துள்ளார்.
ஈராக் நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல் நகரம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஐ எஸ் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டது.
இதனை அடுத்து மொசூலையும் சிரியாவின் சில பகுதிகளையும் இணைத்து அதனை தனி நாடாக தீவிரவாதிகள் அறிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம், மொசூல் நகரை மீட்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் உதவியுடன் ஈராக் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது.
இதன்போது ஐ எஸ் தீவிரவாதிகளுக்கும் ஈராக் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் மரணமடைந்ததுடன் பல்லாயிரக் கணக்கான பொதுமக்க படுயாமடைந்தம் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
அத்துடன் தம்மை பாதுகாத்துக்கொள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் மொசூல் நகர மக்களை, மனித கேடயங்களாக பயன்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் ஈராக் ராணுவத்துக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று உச்சக்கட்ட போர் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மொசூல் நகரம் முழுமையாக அரச தரப்பினால் கைப்பற்றப்பட்டதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி குறிப்பிட்டுள்ளார்.