உமாஒய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ரஜரட்ட மக்களுக்கு பயன்பட்ட நீரையே மகிந்த ராஜபக்ஷ மெதமுலனைக்கு கொண்டுசெல்ல உமா ஒய திட்டத்தை ஆரம்பித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் மின்சார உற்பத்திக்கான திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவில்லை.
நூற்றி ஐம்பது மில்லியன் ரூபாய் மாத்திரம் செலவாகும் உமா ஒயா திட்டம் 500 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தமைக்கான பொறுப்பை மகிந்த ராஜபக்ஷவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் செய்கின்றவர்கள் முதலில் மகிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட வேண்டும் என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.
அத்துடன், காலி முகத்திடலுக்கு மக்களை அழைத்துவர உமாஒய திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியா பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.