2016 ஆம் ஆண்டுடன் ஒப்பீட்டளவில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக புதிய சுகாதார அறிக்கை தெரிவிக்கின்றது.
சுகாதார அமைச்சின் போஷாக்கு இணைப்புப் பிரிவின் புள்ளிவிபரங்களின் படி இந்நாட்டு சனத்தொகையில் 25 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு காரணம் சீனிக்கு அடிமையானதன்மை எனவும் முறையான நடவடிக்கை மேற்கொண்டால் இதிலிருந்து மீள முடியுமென்றும் அப் பிரிவு தெரிவித்துள்ளது.