அஹூங்கல்ல, தொட்டவத்த மாதெல் துறைமுக அங்காடி பொலிஸாரினால் பலவந்தமாக அகற்றப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராய்ச்சி தெரிவி்த்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் அறிந்ததும் தாம் ஆராய்ந்ததில், குறித்த மாதெல் அங்காடிக்காக 2017 ஆம் ஆண்டுக்கான அனுமதிப் பத்திரம் பெறாமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவந்துள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட ராஜாங்க அமைச்சர், இதன்படி மாதெல் கைத்தொழிலை மேற்கொள்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள போதும் அங்காடி தொடர்பில் அறிவிப்பதற்கோ அதுபற்றி கலந்துரையாடுவதற்கோ யாரும் முன்வரவில்லை என்பதன் காரணமாகவே இந்த நிலை தோன்றியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.