இலங்கை – இந்திய உடன்படிக்கைகளால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை-தரஞ்சித் சிங் சாந்து

275 0
இலங்கை – இந்திய உடன்படிக்கைகளால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டை இந்திய உயர்ஸ்தானிகரகம் மறுத்துள்ளது.
கொழும்பில் இம்பெற்ற இந்திய – இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் கைத்தொழில் பொது கூட்டத்தில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சாந்து இதனைத் தெரிவித்துள்ளார்.
எட்கா உள்ளிட்ட பல்வேறு உடன்படிக்கைகள் தொடர்பில் இந்தியாவும், இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இவ்வாறான உடன்படிக்கைகளால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்று சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
துரதிஸ்ட்ட வசமாக அவர்கள் இவ்வாறான உடன்படிக்கைகள் தொடர்பிலான போதிய தெளிவினைப் பெற்றுக் கொள்ளாமல் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இந்த உடன்படிக்கைகள் அடிப்படையிலான வேலைத்திட்டங்கள் இந்திய – இலங்கை கூட்டு வேலைத்திட்டங்களாகும்.
இவற்றின் ஊடாக இலங்கைக்கு பாரிய அளவிலான வெளிநாட்டு முதலீடுகளையும், அந்நியசெலாவணியையும் வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதன்மூலம் இலங்கையில் ஆயிரக் கணக்கான நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படுதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கப்பெறும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment