கிளிநொச்சியில் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை

258 0
 கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தங்களை உடனடியாக பதிவு செய்யுமாறு கோருகின்றது வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை
கிளிநொச்சி மாவட்டத்தில் முச்சக்கரவண்டி போக்குவரத்தினை சீர்படுத்தும் பொருட்டு வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது, அதனடிப்படையில் மேற்குறிப்பிடப்பட்ட கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்திற்குட்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் 450 பேர் சேவையில் ஈடுபடுவதாக அறியக்கிடைக்கிடைப்பதுடன். கடந்த காலங்களில் செயற்பட்ட நான்கு நிர்வாகத்தினரும் ஒழுங்கான முறையில் செயற்படாத காரணத்தால்  பல பிரச்சனைகள் இடம்பெற்றுள்ளமையும் அறியக்ககூடியதாக உள்ளது.மேலும் கடந்த வருடம் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் போக்குவரத்து நியதிச்சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது வீதிப்போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளின் நலன்கருதி முச்சக்கர வண்டிகள் சங்கங்களையும் நெறிப்படுத்தி கண்காணிக்க அக்கறை கொண்டுள்ளது.
அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொமுது பயணிகள் சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் விபரங்களை பதிவு செய்வதற்கான அறிவித்தலை கடந்த 25.05.2017 ம் திகதி கடிதம் முலம் தற்பொழுது செயற்பாட்டிலுள்ள சங்கத் தலைவர் ஊடாக அதிகாரசபை தெரியப்படுத்தியிருந்தது.
இவ்அறிவித்தலின்படி இதுவரையில் 95 உரிமையாளர்களே தங்களின் விபரங்களை எமது கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர், ஏனைய உரிமையாளர்கள் தமது விபரங்களை ஒப்படைக்காமல் அகக்கறையின்றி செயற்படுகின்றனர். எனவே இதுவரை காலமும் ஆவணங்களை ஒப்படைக்கத்தவறிய முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எதிர்வரும் 25-07-2017 ஆம் திகதிக்கு முன் ஏற்கனவே எம்மால் அறிவிக்கப்பட்ட விபரங்கள் அடங்கியதான கோவையை எமது கிளிநொச்சி மாவட்ட வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலும் குறிப்பிட்ட நடைமுறைகளுக்கு அமைவாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் செயற்படாத பட்சத்தில் எக்காரணம் கொண்டும் புதிய நிர்வாக தெரிவுப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதனையும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார், அத்தோடு பொது மக்களின்  நன்மை கருதி தரமான சேவை வழங்குவதற்கு அனைவரும் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக செயற்பட்டு நல்லதொரு புதிய நிர்வாகத் தெரிவினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a comment