யுத்தத்தின் போது கொல்லப்பட்ட இசைப்பிரியா மற்றும் வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் மேன்னெடுக்கப்பட வேண்டும் என்று யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான செயலணியின் அமைர்வு நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட யாழ்.மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களான த.வினோஜித், உ.சாளின், சி.மயூதரன், லோகதயாளன் ஆகியோரே மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் அங்கு மேலும் தெரிவிக்கையில்:- வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் எந்த விசாரணைகளும் இதுவரைக்கும் முன்னெடுக்கப்படவில்லை.
ஆனால் கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இது போன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் கொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொர்பிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்ட வேண்டும்.மேலும் இறுதி யுத்தத்தின் போது ஆடைகளை களைந்து மானபங்கப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா தொடர்பிலும் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.