இந்திய இராணுவப் புலனாய்வாளர்களால் தமிழகம் – கோயமுத்தூர் பகுதியில் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் கைதாகியுள்ளனர்.
இந்திய விமானப்படைத் தளம் அமைந்துள்ள பிரதேசத்துக்கு அருகில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இந்தியாவின் வடகிழக்கில் செயற்பட்டு வரும் தடைசெய்யப்பட்ட கடும்போக்குவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அசாமில் இடம்பெற்ற மோதல் ஒன்றை அடுத்து அங்கிருந்து தப்பிய குறித்தநபர்கள், கோயமுத்தூரில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தநிலையிலேயே கைதாகி இருக்கின்றனர்.